Headlines

முதிய தம்பதியர் வீட்டில் நகை திருட்டு :சிசிடிவியால் வெளியான உண்மை

முதிய தம்பதியர் வீட்டில் நகை திருட்டு :சிசிடிவியால் வெளியான உண்மை

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அடுத்த ஆறுமுகநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுப்பையா–கல்யாணி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர் மகன் ரயில்வேயில் வேலை பார்த்து வருகிறார்.

மகள்கள் அனைவரும் பக்கத்து கிராமங்களுக்கு திருமணமாகி சென்றுள்ள நிலையில் வீட்டில் கல்யாணி சுப்பையா தம்பதிகள் மட்டும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு காற்றுக்காக முதிய தம்பதிகள் இருவரும் கதவை திறந்து வைத்து படுத்துள்ளனர்.

அப்போது இரவு சுமார் 12 மணியளவில் மர்ம நபர் ஒருவர் சுவர்ஏறி குதித்து வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

வீட்டுக்குள் படுத்திருந்த கல்யாணி அருகே சிறிது நேரம் அமர்ந்திருந்த திருடன் நகைகளை எங்கே வைத்திருக்கிறார் என நோட்டமிட்டு சத்தம் இல்லாமல் பீரோவை திறந்து அதில் இருந்த சுமார் 3½ பவுன் தங்க நகைகளை திருடியுள்ளார்.

பின்னர் கல்யாணியின் அருகே அமர்ந்திருந்து வேறு பொருட்களை திருடலாம் என நோட்டம் விட்டு இருந்து வந்துள்ளார் பார்த்து அப்போது கல்யாணி தனது பேரன் என்று ஏன் இங்கு அமர்ந்திருக்கிறாய் போய் படு என கூறியதை தொடர்ந்து அங்கிருந்து எழுந்து மெதுவாக நடந்து ஒன்றும் தெரியாதது போல் மீண்டும் அதே பகுதியில் சுவர் ஏறி குதித்து வெளியே சென்று விட்டார்.

விடிந்ததும் பீரோ திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பையா கல்யாணி தம்பதியினர் இந்த திருட்டு தொடர்பாக புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் தொடர்ந்து புதுக்கோட்டை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

நள்ளிரவில் சுவர் ஏறி குதித்து திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் வீட்டில் ஆள் இருக்கும்போதே துணிச்சலாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *