Headlines

திமுகவில் இனி 110 மாவட்டங்கள் : அறிவிப்பு வெளியிட்ட ஸ்டாலின்

திமுகவில் இனி 110 மாவட்டங்கள் : அறிவிப்பு வெளியிட்ட ஸ்டாலின்

திமுகவின் அமைப்பு மாவட்டங்களின் எண்ணிக்கையை 77- லிருந்து 110 ஆக உயர்த்தி திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின் திமுகவின் உட்கட்சி கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. கருத்து கேட்பு குழுவினர் கட்சியினரை சந்தித்த போதும் இதையே அவர்கள் வலியுறுத்தினர்.

உட்கட்சி ஜனநாயத்திற்கு பெயர் பெற்ற திமுகவில் கடந்த முறை உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்ட விதம் பல நல்ல நிர்வாகிகளை கட்சியில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளதாக புகார் தெரிவித்தனர்.

தலைமைக்கு நெருக்கமான நிர்வாகிகள், மக்களிடம் செல்வாக்குள்ள கட்சியினரை ஓரங்கட்டி வருகின்றனர். கொள்கை சார்ந்து இயங்கும் துடிப்பான இளைஞர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை என கட்சி அமைப்பு செயல்பாடு பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து கட்சி அமைப்பு மறுசீரமைக்கப்படும் என திமுக தலைமை செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவராகத் தான் பொறுப்பேற்று ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளான இன்று கட்சி அமைப்பு மறுசீரமைப்பு பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன்படி, சென்னையில் இருந்த 7 மாவட்டங்கள் 10 ஆகப் பிரிக்கப்பட்டுள்ளன. கோவை, மதுரை, சேலம் தலா 5 மாவட்டங்களாகவும், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருச்சி, கடலூர் தலா 4 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு மாவட்டங்கள் 2 முதல் 3 அமைப்பு ரீதியான மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நீலகிரி, அரியலூர், பெரம்பலூர், நாகை, மயிலாடுதுறை ஆகியவை தலா ஒரு மாவட்டமாகத் தொடரும் எனவும், மக்கள் தொகை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் தனி மாவட்டமாக செயல்படும்.என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *