Headlines

நீங்கள் என்ன இங்கிலாந்தின் அரசரா? தவெக அமைச்சரை கண்டித்த நீதிமன்றம்

நீங்கள் என்ன இங்கிலாந்தின் அரசரா? தவெக அமைச்சரை கண்டித்த நீதிமன்றம்

நிதியமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல. அவர் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சகோதரரை தாக்கிய வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய அமைச்சர் மரிய வில்சனுக்கு சென்னை உயர்நீதிமன்ற லஷ்மி நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதே நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார். மனுதாரர் மாநிலத்தின் நிதி அமைச்சர்தான் என நீதிபதி தெரிவித்தார்.

அமைச்சராவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர், பதவிக்கு வந்தபிறகு ஆஜராக மாட்டாரா என நீதிபதி லட்சுமி நாராயணன் கேள்வி எழுப்பினார்.

எந்த தேதியில் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் என பிற்பகல் தெரிவிக்கும்படி மரியவில்சன் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் புதுச்சேரி போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி மரிய வில்சன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

yy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *