Headlines

கவிழ்ந்த டேங்கர் : சாலையில் ஆறாக ஓடிய பால்

கவிழ்ந்த டேங்கர் : சாலையில் ஆறாக ஓடிய பால்

பெங்களூரு அருகே பால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்த பால் சாலையில் ஆறு போல ஒடியது.

பெங்களூரு – புனே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிரா பகுதியில் பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

கவிழ்ந்த டேங்கர் : சாலையில் ஆறாக ஓடிய பால்

இந்த விபத்தில் டேங்கர் லாரி கடுமையாக சேதமடைந்ததுடன், அதில் ஏற்றிச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான லிட்டர் பால் முழுவதும், சாலையில் வழிந்தோடியது.
சாலையில் பால் பெருக்கெடுத்து ஓடியதைக் கண்ட அப்பகுதி மக்கள், பாத்திரங்கள் மற்றும் பாட்டில்களுடன் வந்து, பாலைப் பிடித்துச் செல்ல முற்பட்டனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *