Headlines

நேபாள பெரு வெள்ளம் : நிம்மதியிழந்நு தவிக்கும் தமிழக குடும்பங்கள்

நேபாள பெரு வெள்ளம் : நிம்மதியிழந்நு தவிக்கும் தமிழக குடும்பங்கள்

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது. 299 இந்தியர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.

காணாமல் போன இந்தியர்களில் 73 பேர் திரிசூலி அணை பணிகளில் ஈடுபட்டவர்கள் என்றும், மற்றவர்கள் ஆன்மீக யாத்திரிக்கை சென்றவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கும்பகோணம் டிராவல் ஏஜென்சி மூலம் 57 பேரும், சென்னை குரோம்பேட்டை டிராவல் ஏஜென்சி மூலம் 49 பேரும் நேபாளம் சென்றிருந்தனர்.

கும்பகோணம் டிராவல் ஏஜென்சி மூலம் சென்ற 20 பேர் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் மற்றவர்கள் நிலை என்ன என்பது குறித்து உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம், தேனி மாவட்டத்தில் இருந்து ஆன்மீக யாத்திரைக்கு சென்றவர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர்களிடம் உறவினர்கள் மனு அளித்தனர்.

அதேபோல் கோவை, ஈரோடு,விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களிலிருந்து யாத்திரை சென்றவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *